சுமார் 6 கிழமைகளில் $1,500 பில்லியனை இழந்த SpaceX 

சுமார் 6 கிழமைகளில் $1,500 பில்லியனை இழந்த SpaceX 

உலகின் முதலாவது செல்வந்தர் என்று கணிக்கப்படும் Elon Musk ஆரம்பித்த SpaceX என்ற நிறுவனம் சுமார் 6 கிழமைகளுக்கு முன் பங்கு சந்தைக்கு வந்தபோது அதன் பங்கு ஒன்றின் விலை $225.64 வரை உயர்ந்து இருந்தது.

இந்த பங்கின் விலை உச்சத்தில் இருந்தபோது SpaceX நிறுவனத்தின் மொத்த வெகுமதி சுமார் $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) ஆக இருந்தது.

இன்று திங்கள் SpaceX நிறுவன பங்கு ஒன்றின் விலை $108.66 வரை குறைந்து உள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் வெகுமதியும் சுமார் $1,500 பில்லியன் ஆக குறைந்து உள்ளது.

இந்த பங்கின் விலை உச்சத்தில் இருந்த போது இந்த பங்குகளை அதிகம் கொண்டிருந்த Elon Musk உலகின் முதலாவது trillionaire ஆகி இருந்தார். பங்கின் விலை வீழ்ச்சியால் இவரும் trillionaire தரத்தை இழந்துள்ளார்.