ஹோர்முஸ் கப்பல் பாதை முடங்கியது போல் செங்கடல் கப்பல் பாதையும் முடங்கலாம் என்ற நிலை தோன்றியதால் மசகு எண்ணெய்யின் விலை பரல் ஒன்றுக்கு $105 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானின் ஆதரவு கொண்ட யெமென் நாட்டு ஆயுத குழுவான கூதி (Houthi) செங்கடல் கரையோர யெமென் நகரான Mocha வை வியாழன் கைப்பற்றி உள்ளது. இங்கிருந்து கூதி இலகுவில் செங்கடலையும் Aden குடாவையும் இணைக்கும் Bab al-Mandeb நீரிணையை கட்டுப்படுத்தி முடக்கலாம்.
சூயஸ் கால்வாய் ஊடு செல்லும் கப்பல்கள் Bab al-Mandeb ஊடே சென்று இந்து சமுத்திரத்தை அடையலாம். இந்த கப்பல் பாதை முடங்கினால் உலக பொருளாதாரம் மேலும் பாரிய வீழ்ச்சியை அடையும்.
அத்துடன் ஏற்கனவே பலம் இழந்துள்ள அமெரிக்க படைகள் செங்கடல் பகுதியையும் கண்காணிக்க தள்ளப்படும். அது அமெரிக்க படைகளின் ஹோர்முஸ் செறிவை ஐதாக்கும்.
குறிப்பாக அமெரிக்காவில் midterm தேர்தல் இடம்பெறவுள்ள காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் இன்னோர் யுத்த முனையும் ரம்பின் கட்சிக்கு பாதகமாக அமையும்.
