ஜப்பானின் Shoko Asahara தூக்கில் இடப்பட்டார்

ShokoAsahara

ஜப்பானில் இயங்கிய Amu Shinrikyo என்ற cult ஒன்றின் தலைவரான, 63 வயதுடைய, Shoko Asahara என்பவரும், அவரின் உதவியாளர் 6 பேரும் தூக்கில் இடப்பட்டதாக ஜப்பானின் நீதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
.
தூக்கில் இடப்பட்ட மற்றைய 6 பேரும் பின்வருமாறு: 68 வயதுடைய Kiyohide Hayakawa, 48 வயதுடைய Yoshihiro Inoue, 54 வயதுடைய Tomomitsu Niimi, 53 வயதுடைய Masami Tsuchiya, 55 வயதுடைய Tomomasa Nakagawa, மற்றும் 58 வயதுடைய Seiichi Endo.
.
இந்த குழு 1995 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள subway களுள் sarin வகை நச்சு வாயுவை பரப்பி 29 பேரை கொலை செய்திருந்தது. அத்துடன் 6,000 பேர் வரை பாதிக்கப்பட்டும் இருந்தனர்.
.
இவர்கள் மீதான வழக்குகள் இந்த வருடம் ஜனவரி மாதமே முற்று பெற்றன. மொத்தம் 13 பேர் தூக்கில் இடப்படுவார் என்று கூறப்படுகிறது.
.
புத்த மற்றும் இந்து சமய கொள்கைகளுடன் 1987 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு பின் கிறீஸ்தவ கருத்துக்களையும் உள்ளடக்கி இருந்தது.
.