ஜப்பான், தென் கொரியா பொருட்களுக்கு ரம்ப் 25% வரி

ஜப்பான், தென் கொரியா பொருட்களுக்கு ரம்ப் 25% வரி

ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளிலும் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக இன்று திங்கள் அறிவித்துள்ளார்.

இந்த வரி நடைமுறைக்கு வந்தால் Toyota, Honda போன்ற ஜப்பானின் பெரிய நிறுவனங்களும், Samsung போன்ற தென் கொரியாவின் பெரிய நிறுவனங்களும் பெரிதும் பாதிப்பு அடையும்.

இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா கொள்வனவு செய்யும் மொத்த பெறுமதியிலும் மிக குறைந்த அளவு பெறுமதிக்கே இந்த நாடுகள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்கின்றன ரம்ப் குற்றம் கூறியுள்ளார்.

இந்தியா போன்ற நாடுகளுக்கும் ரம்ப் விரைவில் புதிய இறக்குமதி வரிகளை அறிவிப்பார்.