அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கு நாடுகள் ஈரான் மீது கொண்டிருந்த கணிப்பிலும் பலமாக ஈரான் உள்ளது என்று ஜெர்மன் அதிபர் (Chancellor) Friedrich Merz கூறியுள்ளார்.
இன்று திங்கள் North Rhine-Westphalia வில் ஆற்றிய உரையிலேயே ஜெர்மன் அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். இவரின் கூற்று அமெரிக்க சனாதிபதி ரம்பை விசனம் அடைய செய்யும்.
Merz தனது கூற்றில் “Iranians are clearly stronger than one thought” என்றுள்ளார். அத்துடன் ஈரானியர் பேச்சுவார்த்தைகளை அறிவான முறையில் கையாள்வதாகவும் (obviously negotiating very skillfully) Merz கூறியுள்ளார்.
ஈரான் பலமாக இருப்பதற்கு அமெரிக்க ரம்ப் அரசு முறையான யுத்த கணிப்புகள் இன்றியும், யுத்தத்தில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமலும் யுத்தத்துக்கு சென்றதே காரணம் என்கிறார் Merz.
ஹோர்முஸ் முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஐரோப்பிய நாடுகளே.
