டுபாய்-நியூசிலாந்து 14,200 km விமானசேவை

Dubai-Auckland

டுபாயை மையமாக கொண்ட Emirates விமானசேவை இன்று டுபாயில் இருந்து நியூசிலாந்தில் உள்ள Auckland நகர் வரையான உலகத்திலேயே மிகநீண்ட விமானசேவையை ஆரம்பித்துள்ளது. இந்த சேவைக்கு உலகத்திலேயே மிக பெரிய பயணிகள் விமானமான Air Bus 380 விமானம் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இந்த சேவைக்கு 17 மணித்தியாலம் 15 நிமிடங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டு இருந்தாலும் உண்மையில் அச்சேவை 16 மணித்தியாலம் 24 நிமிடங்களை மட்டுமே எடுத்து இருந்தது.
.
இதுவரை அமெரிக்காவின் டாலஸ் (Dallas) நகருக்கும் ஆஸ்திரேலியாவின் சிட்னி (Sydney) நகருக்கும் இடையிலான Qantas விமானசேவையே மிக நீண்ட விமான சேவையாகும். Qantas விமான சேவையின் சேவையான இது 13,800 km நீளம் கொண்டது.
.
அதேவேளை Emirates விமான சேவை டுபாய்-பனாமா (Panama) விமான சேவையை 2017 இல் ஆரம்பிக்கவுள்ளது. இது 13,820 km நீளம் கொண்டதாக இருந்தாலும் முழு பயண நேரம் 17 மணித்தியாலம் 35 நிமிடங்களாக இருக்கும்.
.

சிங்கப்பூர் விமான சேவை 2018 ஆம் ஆண்டில் சிங்கப்பூர்-New Jersey சேவையை ஆரம்பிக்கவுள்ளது. மொத்தம் 15,300 km நீளம் கொண்ட இந்த சேவை சுமார் 19 மணித்தியாலங்கள் நேரத்தை எடுக்கும் என கணிக்கப்படுகிறது.
.