டெல்லியில் கார் வெடித்தது, 10 பேர் பலி 

டெல்லியில் கார் வெடித்தது, 10 பேர் பலி 

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள Red Fort என்ற 17ம் நூற்றாண்டு அரண்மனைக்கு அருகில் திங்கள் இரவு கார் ஒன்று வெடித்ததால் குறைந்தது 10 பேர் பலியாகியும், 30 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.

கார் வெடித்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

அவ்விடத்துக்கு மெதுவாக நகர்ந்து வந்த ஒரு Hyundai i20 வகை கார் Red Light ஒன்றுக்கு தரித்த வேளையில், உள்ளூர் நேரப்படி மாலை 6:52 மணிக்கு வெடித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதன் பின் இந்திய விமான நிலையங்கள், பொது இடங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுள்ளது.