BBC செய்தி சேவை செய்த ஆய்வு ஒன்று இந்திய தலைநகர் டெல்லியில் சூழல் மாசடைவதை திட்டமிட்டு மறைக்கிறார்களா என்று சந்தேகிக்கப்பட வைக்கிறது. குறிப்பாக நவம்பர் 8ம் திகதி தீபாவளி தின Air Quality Index (AQI) தரவுகள் பிரதான கணிப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
தேசிய அளவில் Central Pollution Control Board (CPCB) என்ற திணைக்களத்தின் தரவுகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவர்களே பாதகமான AQI தரவுகளை கைவிட்டு உள்ளனர்.
ஆனால் பெருமளவில் பயன்படுத்தப்படாத Delhi Pollution Control Commission (DPCC) ஒவ்வொரு மணித்தியாலமும் AQI வாசிப்புகளை பதிந்து வைத்துள்ளது.
மேற்படி AQI வாசிப்பு ஒரு கன மீட்டர் வளியில் உள்ள ஆபத்தான PM2.5 மாசு துகள்களின் எண்ணிக்கையை காட்டுகிறது.
CPCB தனது பதிவில் ஒரு கன மீட்டர் வளியில் 1,000 micrograms துகள்களுக்கு மேலாக மாசு இருந்த நேரங்களில் AQI பதிவை செய்யவில்லை. காரணம் கேட்ட போது தமது இயந்திரம் கன மீட்டர் வளியில் 1,000 micrograms துகள்கள் அல்லது அதற்கு குறைவான மாசு இருந்தால் மட்டுமே AQI ஐ கணிக்கும் என்று கூறியுள்ளது.
அதேநேரம் DPCC தீபாவளி அன்று இரவு கன மீட்டர் வளியில் 3,000 micrograms மாசு துகள்கள் வரை இருந்ததாக கூறுகிறது.
World Health Organization வருடாந்த சராசரி மாசு கன மீட்டர் வளியில் 5 microgram க்கு குறைவாக இருக்க வேண்டும் என்கிறது.
உதாரணமாக NSUT Jaffarpur வாசிப்பு:

