இஸ்ரேல் காசா மீது திணித்துள்ள தடைகளை மீறி சூழல் பாதுகாப்பு வாதியான Greta Thunberg உதவி கப்பல் ஒன்றை காசா நோக்கி செலுத்துகிறார். Madleen என்ற இந்த கப்பல் இத்தாலியின் Catania என்ற தென்பகுதி துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து உள்ளது.
Freedom Flotilla Coalition என்ற தொண்டர் அமைப்பின் ஆதரவுடனேயே Thunberg இந்த உதவி வழங்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஞாயிறு பயணத்தை ஆரம்பித்த இவருடன் மொத்தம் 11 தொண்டர்கள் பயணிக்கின்றனர்.
சுவீடன் நாட்டவரான Thunberg தான் எதிர்நோக்கும் அபாயம் காசாவில் மக்கள் அனுபவிக்கும் live-streamed genocide இலும் பெரிதல்ல என்றும் கூறியுள்ளார்.
இவர்களின் கப்பலை இஸ்ரேல் தடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.