தனக்கு அடிவருடா பத்திரிகையாளரை தடுத்த ரம்ப்

தனக்கு அடிவருடா பத்திரிகையாளரை தடுத்த ரம்ப்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் தான் கூறும் பொய்களை, செய்யும் மூடத்தனங்களை கேள்வி எதுவும் இன்றி பரப்புரை செய்யாத CNN, MS Now, Politico ஆகிய பத்திரிகையாளரை வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் அமர்வுகளுக்கு செல்ல அனுமதி மறுத்துள்ளார்.

மேற்படி பத்திரிகை நிறுவனங்கள் ரம்பின் தடைக்கு எதிராக வழக்கு ஒன்றையும் திங்கள் தாக்கல் செய்துள்ளன.

மேற்படி பத்திரிக்கை நிறுவனங்கள் தனக்கு எதிராக பொய் செய்திகளை பரப்புகின்றன என்று தடைக்கு ரம்ப் காரணம் கூறியுள்ளார். அப்படியானால் மேற்படி நிறுவனங்கள் பரப்பிய பொய் செய்தி ஒன்றை கூறுங்கள் என்றால் ரம்ப் உதாரணம் ஒன்றை கூற முடியாது உள்ளார்.

அமெரிக்க மக்கள் மத்தியில் தனக்கு ஆதரவு குறைய மேற்படி பத்திரிகை நிறுவனங்கள் காரணம் என்று குமுறுகிறார் ரம்ப்.

ரம்ப் செவ்வாய் ஐ.நா. பொது அமர்வுக்கு சென்றவேளை அங்கே CNN செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் Kaitlan Collins இருப்பதை கண்டு “You should not be here” என்று குமுறியுள்ளார்.

2018ம் ஆண்டும் ரம்ப் CNN செய்தி நிறுவனத்தை தடை செய்ய, 2017ம் ஆண்டு ரம்பால் நீதிபதி ஆக்கப்பட்ட நீதிபதி Timothy Kelly ரம்பின் தடையை தடுத்து இருந்தார். தற்போது ரம்ப் தான் பதவியில் அமர்த்திய நீதிபதி மீதும் பாய்கிறார்.

மூன்று செய்தி நிறுவனங்கள் மீதான மேற்படி தடையை எதிர்த்து ரம்பின் சில நிகழ்வுகளை AP, The Washington Post, The New York Times ஆகிய செய்தி நிறுவனங்களும் தற்போது புறக்கணித்து வருகின்றன.