மூலைக்கு மூலை தமிழ் மரபு திங்கள் கொண்டாடி, நகரத்துக்கு நகரம் தமிழ் கொடி ஏற்றி, வீதிக்கு வீதி தமிழ் விழா கொண்டாடி தமிழை வயிற்று பிழைப்புக்கு மட்டும் பயன்படுத்தும் தமிழரை கொண்ட கனடாவில் இணையம் மூலம் வர்த்தகம் செய்யும் Amazon நிறுவனம் (amazon.ca) C$19.66 க்கு விற்பனை செய்யும் தமிழ் குறுக்கெழுத்து புத்தகம் ஒன்று தமிழை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்துள்ளது.
TAMIL CROSSWORD PUZZLE BOOK என்ற இந்த புத்தகம் வழங்கும் குறுக்கெழுத்து பயிற்சிகள் மெய் எழுத்துகளில் உள்ள குற்றை பிரித்து ஒரு எழுத்தாகவும், விசிறிகளை பிரித்து தனி எழுத்துக்களாகவும் துண்டாடி தமிழை படுகொலை செய்துள்ளது. இந்த படுகொலைக்கு இவர்கள் பயன்படுத்திய computer font காரணம் என்றாலும் எப்படி இவ்வாறான படுகொலை புத்தகத்தை C$19.66 க்கு விற்பனை செய்யலாம்?
உதாரணம் 1:

போட்டிக்கான விளக்கம்:


இந்த குறுக்கெழுத்துக்கு புத்தகம் தரும் விடை:

உதாரணம் 2:
உங்களால் முடிந்தால் இது என்ன சொல் என்று கூறுங்கள் பார்க்கலாம்:

புத்தகத்தில் தரப்பட்ட விளக்கம்: “மீனாட்சி அம்மன் கோவில் புகழ்பெற்ற நகரம்”
புதிரின் விடை “மதுரை” என்றால் எப்படா ‘து’ என்ற எழுத்து ‘த’ வும் சரிச்சு போட்ட ‘P’/விசிறியும் ஆனது?
அடுத்து, அது என்ன ‘ச்’ சுக்கு அடுத்து இரட்டை கொம்பு? அது எப்படி ‘ரை’ ஆகும்.
மதுரை ஒரு 3 எழுத்து சொல் தானே, எப்படி 5 எழுத்து சொல் ஆனது? மேலும் பிரிச்சு Welfare அடிக்கும் திட்டமோ?
உதாரணம் 3:
திருக்குறளை இயற்றியவர் இவராம்:

Amazon account உள்ளோர் தயவு செய்து இந்த புத்தகத்துக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள், C$19.66 விரயம் செய்வதை தடுங்கள்.
இதுதான் அந்த புத்தகத்தின் Amazon link. தயவு செய்து உங்கள் பணத்தை விரயம் செய்யாதீர்.
https://www.amazon.ca/Tamil-Crossword-Puzzle-Book-Challenging/dp/B0G15KDS9X#
