தம் ஈரானிய உளவாளிகளை கைவிட்ட CIA

தம் ஈரானிய உளவாளிகளை கைவிட்ட CIA

தம் ஈரானிய உளவாளிகளை அமெரிக்காவின் உளவு படையான CIA எவ்வாறு கைவிட்டது என்று விபரிக்கும் ஆக்கம் ஒன்றை இன்று Reuters செய்தி சேவை வெளியிட்டு உள்ளது. உளவாளிகள் அகப்படுவதற்கு CIA உளவாளிகளுக்கு வழங்கிய பாதுகாப்பு அற்ற தொடர்பு வழிகளே காரணம் என்று கூறப்படுகிறது.

Gholameza Hosseini என்ற ஈரானிய நபர் தானாக முன்வந்து CIA உளவு படைக்கு உதவ முன்வந்தார். Hosseini CIAயின் இணையத்துக்கு சென்று “I’m an engineer who has worked at the nuclear site Natanz and I have information” என்று தனது உளவு வேலை செய்யும் நோக்கத்தை CIA அமைப்புக்கு தெரிவித்து உள்ளார்.

மூன்று மாதங்களின் பின் Husseini டுபாய் நகருக்கு CIA அழைத்து. அங்கு Chris என்ற CIA அதிகாரி இவரை Souk Madinat Jumeirah என்ற வர்த்தக இடத்தில் சந்தித்து மொழிபெயர்ப்பாளர் உதவியுடன்  உரையாடினார். பின்னர் இவரை தாய்லாந்து, மலேசியா ஆகிய இடங்களுக்கும் CIA அழைத்து மொத்தம் 7 தடவைகள் உரையாடியது.

2008ம் ஆண்டு Husseini மேலும் உயர் பதவியில் உள்ள CIA அதிகாரியை டுபாயில் சந்தித்து உள்ளார். அந்த அதிகாரி ஒரு கடதாசியை வழங்கி Husseini தான் வழங்கும் உண்மைகளை வேறு எந்த நாட்டுக்கும் வழங்கேன் என்று எழுதி சத்தியம் செய்ய கேட்டிருந்தார்.

இன்னொரு அதிகாரி Husseini க்கு இரகசியங்களை அனுப்ப ஒரு இரகசிய இணையத்தை (iraniangoals.com) அறிமுகம் செய்தார். பாரசீக மொழியில் இருந்த அந்த இணையம் உண்மையை மறைக்கும் நோக்கில் கால்பந்தாட்ட ஆவலர்களுக்கான பதிவுகளை கொண்டிருந்தது. ஆனால் அதில் ஒரு இருந்த search box அமெரிக்காவின் CIA அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளும் இரகசிய வசதியை கொண்டிருந்தது. அதில் உள்ள search பகுதியில் ஒருவர் இரகசிய password ஒன்றை பதிவு செய்தால் உடனே அந்த நபருக்கு இரகசிய தொடர்பு வழிகள் கிடைக்கும்.

ஆனால் 2018ம் ஆண்டு Yahoo செய்தி ஒன்று மேற்படி இரகசிய தொடர்பு இணையம் ஆபத்தானது என்று கூறி செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த இணையத்தில் இருந்த குறைபாடு (flaw) காரணமாக சில ஈரானிய மற்றும் சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் Yahoo கூறியிருந்தது. ஆனாலும் CIA இந்த பாதுகாப்பு அற்ற வழிமுறையை தொடர்ந்து பயன்படுத்தியது.

2009ம் ஆண்டு மலேசியாவில் Hosseini சந்தித்த CIA அதிகாரி ஈரானின் Fordow என்ற இடத்து அணு நிலைய உண்மைகளை அறியுமாறு கூறியிருந்தார். அத்துடன் Husseini குடும்பம் அமெரிக்கா சென்று வாழும் சந்தர்ப்பம் தொடர்பாகவும் CIA அதிகாரி உரையாடி உள்ளார். CIA ஆண்டு ஒன்று 100 இவ்வகை விசாக்களை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

2010ம் ஆண்டு Husseini ஈரானின் தலைநகர் தெகிரானில் உள்ள விமான நிலையம் ஊடாக தாய்லாந்து செல்ல இருந்தார். தாய்லாந்தில் அவர் மீண்டும் CIA அதிகாரிகளை சந்திக்க இருந்தார். ஆனால் விமான நிலையம் வந்த ஈரானிய அதிகாரிகள் அவரை அழைத்து சென்று அறை ஒன்றில் அமர்த்தினர். ஆபத்தை உணர்ந்த Hosseini உடனே இரகசியமாக தன்னிடம் இருந்த memory card ஒன்றை கடித்து விழுங்கினார். ஆனாலும் அவரின் குற்றங்கள் காரணமாக 2019ம் ஆண்டு வரை சிறை சென்றார்.

இவர் அகப்பட்டதுடன் CIA இவருடனான தொடர்பை துண்டித்தது.

Husseini உட்பட குறைந்தது 6 ஈரானிய உளவாளிகள் மேற்படி இணைய குறைபாடு காரணமாக ஈரானிய அதிகாரிகளிடம் அகப்பட்டு உள்ளனர்.

Mohammad Aghaei என்ற ஈரானியர் 2018ம் ஆண்டு துருக்கி சென்று அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் சில உண்மைகளை வழங்கியிருந்தார். அதற்கு CIA அவருக்கு $2,000 வழங்கியது. ஈரான் திரும்பிய அவர் மீண்டும் துருக்கி சென்று CIA அதிகாரிகளுக்கு மேலும் தகவல்கள் வழங்கினார். ஆனாலும் நாடு திருப்பிய அவர் ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

சுமார் 350 இவ்வகை இணையங்களை CIA பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அனைத்திலும் மேற்படி குறைபாடு (flaw) இருந்துள்ளது. இந்த இணையங்கள் ஈரான், சீனா, ரஷ்யா, பிரேசில், தாய்லாந்து உட்பட சுமார் 20 நாடுகளின் உளவாளிகளால் பயன்படுத்தப்பட்டன. அதனால் பல நாடுகளில் இயங்கிய உளவாளிகள் அந்தந்த நாடுகளில் அகப்பட்டு உள்ளனர்.

நன்றி: Reuters

https://www.reuters.com/investigates/special-report/usa-spies-iran/