வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் Bureau of Labor Statistics (BLS) ஜூலை மாதம் அமெரிக்கா 73,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இத்தொகை எதிர்பார்த்த தொகையிலும் மிக குறைவு.
தனக்கு பெருமை தராத தரவு அறிவிக்கப்பட்டமையால் மூர்க்கம் கொண்ட ரம்ப் Dr. Erika McEntarfer என்ற BLS ஆணையாளரின் (commissioner) பதவியை பறித்துள்ளார்.
BLS ஆணையாளர் தனக்கு எதிரான பொய் தரவை வெளியிட்டு உள்ளதாக ரம்ப் ஆதாரம் இன்றி கூறியுள்ளார்.
ஜூலை வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கான திருத்தி கணிக்கப்பட்ட தொகை முன்னர் அறிவித்த தொகையிலும் 258,000 ஆல் குறைவு என்றும் மீள் கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு தடவைகள் கணிப்பு செய்வது வளமை.
McEntarfer 4 ஆண்டு பதவிக்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்த்தப்பட்டு இருந்தார். அப்போது இவரின் தெரிவுக்கு 86 உறுப்பினர் ஆதரவாகவும், 8 பேர் எதிராகவும் வாக்களித்து இருந்தனர்.