தாமிரபரணி எச்சங்கள் 3,200 ஆண்டுகள் பழையன

தாமிரபரணி எச்சங்கள் 3,200 ஆண்டுகள் பழையன

தமிழ்நாட்டு தாமிரபரணி ஆற்றோரம் (River Thamiraparani) கண்டெடுக்கப்பட்ட முற்கால குடிகளின் மட்பாண்டங்கள் சுமார் 3,200 ஆண்டுகள் பழையன என்று காபன் பரிசோதனை மூலம் அறியப்பட்டு உள்ளது. இந்த காபன் பரிசோதனையை அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Beta Analytic என்ற பரிசோதனை கூடம் செய்துள்ளது.

பொருனை (Porunai) பகுதி அகழ்வுகளில் எடுக்கப்பட்ட பொருட்களே Beta Analytic ஆய்வு கூடத்துக்கு காபன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தன. பரிசோதனையின் பின் இப்பொருட்கள் 1155 B.C. காலத்துக்கு உரியன என்றுள்ளது ஆய்வுகூடம். இந்த செய்தியை தமிழ்நாடு அரசு இன்று வியாழன் தெரிவித்து உள்ளது.

முன்னர் ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட ஆதி பொருட்கள் 9ம் மற்றும் 8ம் நூற்றாண்டுகள் கி. மு. வுக்கு முன்னானவை என்று அறியப்பட்டு இருந்தன. அதனால் தாமிரபரணி குடிகள் மேலும் பழைய ஆகின்றன.

தமிழ்நாடு அரசு பொருனையில் 15 கோடி இந்திய ரூபாய்களுக்கு நூதனசாலை ஒன்றை அமைக்கவுள்ளது.