தாய்வானில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன; ஒன்று அமெரிக்க சார்பு Democratic Progressive Party (DPP), மற்றையது சீன சார்பு KuoMinTang (KMT).
அங்கு சனாதிபதி பதவி தற்போது DPP கையில் உள்ளது. ஆனால் 113 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் KMT கையில் உள்ளது; DPP கட்சியிடம் 51 ஆசனங்களும், எதிரணியில் 62 ஆசனங்களும் உள்ளன. அதனால் சனாதிபதி தான் விரும்பியதை செய்ய முடியாது உள்ளார்.
அத்துடன் KMT உறுப்பினர்கள் சீனாவுக்கு நல்லிணக்க பயணங்களை மேற்கொள்வதையும் DPP விரும்பவில்லை.
பாராளுமன்றத்தில் KMT உறுப்பினர் தொகையை குறைக்க DPP ஒரு சதி செய்தது. சனிக்கிழமை 24 KMT உறுப்பினரை திருப்பி அழைக்க (recall) அவர்களின் தொகுதிகளில் சட்டப்படியான ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை DPP நிகழ்த்தியது.
ஆனால் 24 தொகுதிகளிலும் மக்கள் KMT உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இது சனாதிபதிக்கும், அவரின் DPP கட்சிக்கும் தோல்வியாக அமைந்துள்ளது.
மேலும் 7 KMT உறுப்பினர்களை திருப்பி அழைக்க கேட்டு அவர்களின் தொகுதிகளில் ஆகஸ்ட் 23ம் திகதி வாக்கெடுப்பு நிகழும்.