தீர்மானம் எதுவுமின்றி முடிந்த ரம்ப்-பூட்டின் பேச்சு

தீர்மானம் எதுவுமின்றி முடிந்த ரம்ப்-பூட்டின் பேச்சு

திங்கள் தானும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் உரையாடிய பின்னரே யூக்கிறேன் யுத்த நிறுத்த இணக்கம் சாத்தியமாகும் என்றும் ரம்ப் தற்பொருமையாக பல தடவைகள் கூறி இருந்தாலும், திங்கள் இருவரும் 2 மணி நேரம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை செய்தும் அந்த பேச்சு தீர்மானம் எதுவும் இன்றியே முடிந்துள்ளது.

அதனால் யூக்கிறேன் யுத்த நிறுத்தத்த ஆரம்ப திகதி, யுத்த நிறுத்த காலம், யுத்த நிறுத்தத்தின் உள்ளடக்கம் எதுவுமே தீர்மானிக்கப்பவில்லை. அவர்கள் இருவரும் இந்த விசயங்களை பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரம்ப் எப்போதுமே தன்னை ஒரு வல்லவர், எல்லாம் தெரிந்தவர் என்று கதை விட்டாலும் பூட்டின் இவருக்கு பணியவில்லை என்று தெரிகிறது.

ஆனாலும் ரம்ப் தரப்பு பூட்டின்-செலன்ஸ்கி நேரடி பேச்சு விரைவில் ஆரம்பிக்கும் என்று மீண்டும் கூறி வருகிறது. சில தினங்களுக்கு முன் துருக்கியிலும் இவ்வாறு நேரடி பேச்சு இடமபெறும் என்று கூறியிருந்தாலும் அது நடைபெறவில்லை. துருக்கியில் இருதரப்பு அதிகாரிகள் மட்டுமே பேசினர்.