துருக்கியில் இராணுவ ஆட்சி?

Turkey
.
இன்று புதன் இரவு துருக்கியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. அங்கிருந்து வரும் செய்திகள் அங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதோ என்று சந்தேகப்பட வைத்துள்ளன. துருக்கி இராணுவம் வீதிகளில், குறிப்பாக இஸ்தான்புல், மற்றும் அங்கரா ஆகிய நாகர் வீதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன.
.
ஆனால் அந்நாட்டு பிரதமர் தமது அரசே பதவியில் உள்ளதாக கூறியுள்ளார். சில இராணுவ குழுக்கள் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட முனைந்தாலும், நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவர “security forces had taken necessary measures” என்றுள்ளார் பிரதமர் Binali Yildirim.
.
கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவம் TRT என்ற தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தொலைக்காட்சி நிலையம் கவிழ்ப்பு ஆதரவு செய்திகளை வெளியிடுகிறதாம்.
.

அண்மைக்காலங்களில் அந்நாட்டு ஜனாதிபதி Recep Tayyip Erdogan மேற்கு நாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வந்திருந்தார். பல ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துருக்கி செல்ல விசா வழங்கப்படவில்லை.
.