துருக்கி இராணுவ ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில், 265 பலி

Turkey

துருக்கி இராணுவத்தின் ஒரு பகுதியால் செய்யப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி Recep Tayyip Erdogan நாட்டின் தென் பகுதியில் விடுமுறையை செலவிடுகையில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ஆரம்பமானது. விடயத்தை அறிந்த ஜனாதிபதி cell phone video மூலம் தனது ஆதரவாளர்களை வீதியில் இறங்கி போராட அழைத்தார். அதன்படி பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கினர்.
.
குறிப்பாக இஸ்தான்புல் நகரில் மக்கள் கை உடனடியாக மேலோங்கியது. ஜனாதிபதி இஸ்தான்புல் நகரை சார்ந்தவரே. ஆனால் அங்கரா நகரில் கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவம் அட்டகாசம் புரிந்து வந்திருந்தது. இவர்கள் பயன்படுத்தில் ஹெலி ஒன்றை அரச சார்பு யுத்த விமானம் சுட்டு வீழ்த்தியது. ஜனாதிபதியும் உடனடியாக இஸ்தான்புல் சென்றார். Erdogan ஆதரவு போலீசார் உடனடியாக கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவ உறுப்பினர்களை கைது செய்ய ஆரம்பித்தனர். கவிழ்ப்பு தோல்வியில் முடிந்தது.
.
மொத்தம் 265 பேர் பலியாகி உள்ளனர். அதில் 104 கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவமும் அடங்கும். சில போலீசாரும் பலியாகி இருந்தனர்.
.
அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்தில் வாழும் துருக்கியரான Fethullah Gulen னே இந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பு எத்தனிப்புக்கு காரணம் என்று Erdogan கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்கா அவரை துருக்கி அனுப்பவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
.
கவிழ்ப்பு தோல்வியை அடைந்தபோது 2 ஜெனெரல்கள், 4 கேணல்கள் உட்பட 8 இராணுவத்தினர் ஹெலி ஒன்று மூலம் தப்பியோடி கிரேக்கத்தில் அகதி அந்தஸ்து கேட்டுள்ளனர். அதேவேளை ஜெனெரல் Erdal Ozturk, மற்றும் ஜெனெரல் Adem Huduti ஆகியோர் துருக்கியில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
.

அத்துடன் 2700 க்கும் அதிகமான நீதிபதிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 3000 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவத்தை சட்ட விதிமுறைகளுக்குள் கையாளுமாறு அமெரிக்கா கேட்டுள்ளது.
.