துருக்கி எடோவான் மீண்டும் சனாதிபதி ஆகிறார்

துருக்கி எடோவான் மீண்டும் சனாதிபதி ஆகிறார்

ஞாயிறு துருக்கியில் இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய சனாதிபதி எடோவான் (Tayyip Erdogan, வயது 69) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சுமார் 20 ஆண்டுகளாக இவர் அங்கு தலைமை பதவியில் உள்ளார்.

இவருக்கு 52.1% வாக்குகளும், இரண்டாம் இடத்தில உள்ள Kilicdaroglu என்பவருக்கு 47.9% வாக்குகளும் கிடைத்துள்ளன.

துருக்கி ஒரு நேட்டோ நாடு என்றாலும் இவர் மீது அதிகமான நேட்டோ தலைவர்களுக்கு வெறுப்பு உள்ளது. இவரை ஒருமுறை இராணுவ சதி மூலம் விரட்டும் முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முயற்சி தோல்வியில் முடிய, கிளர்ச்சியாளர் சிலர் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கு தப்பி ஓடினர். ஏனையோர் அகப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

மேற்கு நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக இவர் பல சட்டங்களை துருக்கியில் மாற்றி இருந்தார். அத்துடன் நேட்டோ அல்லாத ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஏவுகணைகள் போன்ற பாரிய ஆயுதங்களையும் கொள்வனவு செய்திருந்தார். இவற்றை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து இருந்தது.

இவரின் வெற்றியை முதலில் வாழ்த்தியவர்களில் ரஷ்யாவின் பூட்டினும் ஒருவர்.