தென் ஆபிரிக்காவில் சரியும் மண்டேலாவின் ANC

SouthAfrica

புதன்கிழமை தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற தேசிய மற்றும் மாநில தேர்தல்களில் மண்டேலா ஆரம்பித்த African National Congress (ANC) என்ற கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு குறைந்து வருவது தெரிந்துள்ளது. சுமார் 72% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மண்டேலா ஆரம்பித்த ANC கட்சிக்கு 57% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த 25 வருடகாலத்தில் இதுவே ANC கட்சிக்கு கிடைத்த மிக குறைந்த ஆதரவு ஆகும்.
.
ANC தொடர்ந்தும் ஆட்சியை அமைக்க போதிய ஆசனங்களை வெல்லும் என்றாலும், அதன் மொத்த ஆசனங்களின் தொகை முன்னரிலும் குறைவாகவே இருக்கும்.
.
அங்கு மக்களுக்கு தேர்தல்களில் ஆர்வமும் குறைந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில் 74% தகுதிபெற்ற வாக்காளர் வாக்களித்து இருந்தாலும், புதன்கிழமை 65% வாக்காளரே வாக்களித்து உள்ளனர்.
.
அங்கு அரசியல் வாதிகளின் ஊழல் காரணமாக மக்கள் அரசியலில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குறிப்பாக ANC உறுப்பினர்களே அதிக ஊழல் குற்றச்சாட்டுகளில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சூமாவுக்கு (Zuma) எதிராக மட்டும் $2.5 பில்லியன் ஊழல் உட்பட பல ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன.
.
அங்கு வேலைவாய்ப்பு இன்மையும் 25% க்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக அதிகம் இளம் சந்ததியினர் வேலை இன்றி உள்ளனர். அங்கு பொருளாதாரம் மிக மந்தமாகவே உள்ளது.
.