தென் ஆபிரிக்கா ரஷ்யா, சீனாவுடன் யுத்த பயிற்சி

தென் ஆபிரிக்கா ரஷ்யா, சீனாவுடன் யுத்த பயிற்சி

தென் ஆபிரிக்கா ரஷ்ய, சீன படைகளுடன் இணைந்த யுத்த பயிற்சிகளை மீண்டும் செய்ய இணங்கி உள்ளது. இதற்கான அழைப்பை தென் ஆபிரிக்கா ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் விடுத்துள்ளது.

Mosi என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சி வரும் பெப்ருவரி மாதம் 17ம் திகதி முதல் 27ம் திகதி வரை இடம்பெறும்.

இந்த அறிவிப்பால் கடும் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா. இந்த யுத்த பயிற்சி ரஷ்யாவின் யுக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் செயல் என்று சாடுகிறது அமெரிக்கா.

BRICS (Brazil, Russia, India, China and South Africa) அணி நாடான தென் ஆபிரிக்கா ரஷ்யாவின் யுக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை கண்டிக்க மறுத்துள்ளது.

மேற்படி யுத்த பயிற்சி தென் ஆபிரிக்காவின் Durban மற்றும் Richard Bay பகுதிகளில் இடம்பெறும். Cape Route என்று அழைக்கப்படும் இந்த கடல் பகுதி உலக கப்பல் போக்குவரத்தின் பிரதான அங்கமாகும்.

2019ம் ஆண்டும் இந்த நாடுகள் இணைந்த யுத்த பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. கரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகள் இப்பயிற்சி நிறுத்தப்பட்டு இருந்தது.