பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் எதையும் வழங்காது, பதிலுக்கு தோல்விகளை வழங்க அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் ஈரானுடன் 60-தின யுத்த நிறுத்தம் (MOU) ஒன்றுக்கு இணங்கினார்.
அந்த 60-தின யுத்த நிறுத்தம் இன்று திங்களுடன் முடிவடைகிறது. ஆனாலும் யுத்தத்தின் அடுத்த நிலை என்ன என்பது தெளிவின்றியே உள்ளது.
பெருமெடுப்பு யுத்தம் எதையும் சாதிக்காத நிலையில் ரம்ப் அணி தற்போது ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளது.
பதிலுக்கு ஈரானும் அவ்வகை தடைகளை சவுதி, UAE, கட்டார், குவைத், பஹ்ரைன் ஆகிய அமெரிக்க சார்பு நாடுகள் மீது திணிக்கிறது. அதனால் ரம்ப் விரைவில் ஈரானுடன் ஒரு இணக்கத்துக்கு வருதல் அவசியம்.
