தேவாலய கொலையாளி குடும்பத்துக்கு $275,000 நன்கொடை 

தேவாலய கொலையாளி குடும்பத்துக்கு $275,000 நன்கொடை 

செப்டம்பர் 28ம் திகதி அமெரிக்காவின் Michigan மாநிலத்து Grand Blanc நகரில் உள்ள The Church of Jesus Christ of Latter-day Saints மீது 40 வயதுடைய Thomas Sanford என்றவன் தனது pick-up வாகனத்தால் மோதி, தீவைத்து, சுட்டு தாக்குதல் செய்ததால் தேவாலயத்தில் இருந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு இருந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

உடன் அங்கு விரைந்த போலீசாரால் Thomas சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு என்ற ஜேசுவின் கூற்றுக்கு ஏற்ப Thomas குடும்பத்துக்கு உதவ Dave Butler என்ற தேவாலய உறுப்பினர் முன்வந்தார். கொலையாளி குடும்பத்துக்கு உதவும் நோற்கில் Dave இணையம் மூலம் முதலில் $10,000 பணம் சேர்க்க முனைந்தார். 

ஆனால் இந்த நிதிக்கு நிதிக்கு முதல் 48 மணித்தியாலத்தில் $275,000 கிடைத்துள்ளது. இந்த நிதிக்கு 7,400 க்கும் அதிகமான தேவாலய உறுப்பினர் நன்கொடை வழங்கி உள்ளனர்.

Mormon church என்று அழைக்கப்படும் இந்த Utah மாநிலத்தில் அதிகம் உறுப்பினரை கொண்டது. அமெரிக்காவில் இதற்கு 6.9 மில்லியன் உறுப்பினர் உண்டு.