தொடரும் இஸ்ரேல், பலஸ்த்தான் மோதலுக்கு 59 பேர் பலி

தொடரும் இஸ்ரேல், பலஸ்த்தான் மோதலுக்கு 59 பேர் பலி

இஸ்ரேல், பலஸ்த்தான் பகுதிகளில் கடந்த திங்கள் முதல் வேகமாக பரவி வரும் வன்முறைகளுக்கு இதுவரை குறைந்தது 59 பேர் பலியாகி உள்ளனர். பலஸ்தீனர் பகுதியான காஸாவில் 53 பேர் பலியாகி உள்ளனர். அதில் 14 பேர் சிறுவர்கள் என்கிறது பலஸ்தீனர் தரப்பு வைத்தியசாலைகள். ஹமாஸ் என்ற ஆயுத குழு ஏவிய சிறு ஏவுகணைகளுக்கு இஸ்ரேல் தரப்பில் 6 பேர் பலியாகி உள்ளனர். இருதரப்பிலும் மொத்தமாக பலநூறு பேர் காயமடைந்தும் உள்ளனர்.

East Jerusalem பகுதில் ஆரம்பித்த மோதல்கள் காஸாவுக்கு பரவி, தற்போது இஸ்ரேல் உள்ளேயும் பரவி உள்ளது. Lod போன்ற இஸ்ரேலின் தலைநகருக்கு அண்மையில் உள்ள நகரங்களில் வாழும், இஸ்ரேல் குடியிருமை கொண்ட பலஸ்தீனர்களுக்கும், அங்குள்ள யூதர்களுக்கும் இடையிலும் தற்போது வன்முறைகள் ஆரம்பித்து உள்ளன.

ஹமாஸ் இதுவரை சுமார் 1,000 சிறு ஏவுகணைகளை ஏவி உள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்த கணைகள் தலைநகர் Tel Aviv வரை பாய்ந்து அங்கும் இருவரை கொன்று உள்ளது. இஸ்ரேல் காஸாவில் உள்ள குறைந்தது 3 பெரிய மாடிகளை குண்டு வீசி தகர்த்து உள்ளது. அதில் ஒன்று 13 மாடிகளை கொண்டது.

தற்போதைய வன்முறைகள் பலஸ்தீன குடும்பங்கள் சிலவற்றை Sheikh Jarrah பலஸ்தீனர் பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி யூதர்களுக்கு வழங்க முனைகையிலேயே ஆரம்பமாகின.