அமெரிக்காவில் சனாதிபதி ரம்புக்கான ஆதரவு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ரம்பின் பொருளாதார மற்றும் குடிவரவு கொள்கைகள் பெருமளவில் அமெரிக்கரால் மறுக்கப்பட்டுள்ளன.
ரம்புக்கான ஆதரவு தற்போது 40% ஆக உள்ளது. இது ரம்பின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் அவருக்கு கிடைக்கும் மிக குறைந்த ஆதரவு.
இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள mid-term தேர்தலில் ரம்பின் Republican கட்சி தற்போது காங்கிரசில் கொண்டுள்ள பெரும்பான்மை Democratic கட்சி கைக்கு மாறலாம். அந்நிலை வந்தால் ரம்ப் தான் விரும்பியதை செய்ய முடியாது இருக்கும்.

Graph: Reuters/Ipsos polls
நாடாளாவில் ரம்புக்கான ஆதரவு 40% என்றாலும், அவரின் Republican கட்சியில் அவருக்கு ஆதரவு 83% ஆகவும், Democratic கட்சியில் ஆதரவு 3% ஆகவும் உள்ளன. கட்சி சார்பு அற்றோர் மத்தியில் ரம்புக்கான ஆதரவு 33% ஆக உள்ளது.