யூக்கிறேன் யுத்தம் தொடர்பாக அலாஸ்காவில் வெள்ளி இடம்பெற்ற ரம்ப், பூட்டின் சந்திப்பு இணக்கம் எதுவும் இன்றி தோல்வியில் முடிந்துள்ளது. ரம்ப் இந்த அமர்வுக்கு பெரும் கனவுடன் சென்று இருந்தாலும், உலகம் அந்த அளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை.
அமர்வின் பின் இருவரும் ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை செய்திருந்தாலும், பத்திரிகையாளரிடம் இருந்து இவர்கள் கேள்விகள் எதையும் எடுக்கவில்லை.
பொதுவாக வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமெரிக்கா வரும்போது பத்திரிகையாளர் மாநாடுகளில் அமெரிக்க சனாதிபதியே முதலில் பேசுவார். ஆனால் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் பூட்டின் முதலில் பேசினார்.
தற்போது இருவரும் தமது விமானங்களில் அலாஸ்காவை விட்டு வெளியேறி உள்ளனர்.
அடுத்த அமர்வுக்கு ரம்பை மாஸ்க்கோ வருமாறு பூட்டின் அழைப்பும் விடுத்துள்ளார்.