நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள mid-term தேர்தலில் சனாதிபதி ரம்பின் Republican கட்சி அமெரிக்க காங்கிரசின் Senate சபையை இழக்கும் பயம் கொண்ட ரம்ப் தரப்பு அரசியல் திருகுதாளத்தில் குதித்துள்ளது.
அலாஸ்கா மாநில Sanator பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். அதில் ஒருவர் தற்போதைய Senator Dan S. Sullivan. இவர் ரம்பின் Republican கட்சி அங்கத்தவர். இவருக்கு எதிராக கடும் போட்டி தொடுப்பவர் Democratic கட்சியின் Mary Peltola.
ஏனைய இருவரின் ஒருவர் பெயர் Daniel J. Sullivan Jr. இவரும் ஒரு ரம்ப் கட்சியினரே. ரம்பின் கட்சியின் தற்போதைய Senator தோல்வி அடைந்தால் தேர்தல் முடிவை நீதிமன்றத்தில் இழுத்தடிக்கவே இந்த இரண்டாம் Sullivan திணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
ரம்பின் கட்டுப்பாட்டில் உள்ள Justice Department ஏற்கனவே இரண்டாம் Sullivan னின் உள்ளடக்கத்துக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. நவம்பர் 3ம் திகதி ரம்ப் தரப்பு வென்றால் மேற்படி வழக்கு கைவிடப்படும். மாறாக Democratic கட்சி வென்றால், மேற்படி வழக்கு தேர்தல் முடிவை நடைமுறை செய்யாது தடுக்க பயன்படுத்தப்படும். இரண்டாம் Sullivan மக்களை குழப்பி விட்டது, அதனாலேயே முதலாம் Sullivan வாக்குகளை இழந்தார் என்பதே ரம்ப் தரப்பின் குற்றச்சாட்டாக இருக்கும்.
இங்கே குறிப்பிட வேண்டிய இன்னோர் விசயம் என்னவென்றால் இரண்டாம் Sullivan போட்டியிடுவதை அலாஸ்கா மாநில Supreme Court ஜூன் மாதம் ஏற்று உறுதி செய்துள்ளது.
அலாஸ்காவில் ஒருவர் 4 பேருக்கு 1ம், 2ம், 3ம், 4ம் தெரிவுகளாக வாக்களிக்கலாம். எந்தவொரு போட்டியாளரும் 50% க்கு அதிகமான 1ம் தெரிவு வாக்குகளை பெறாவிடின், 2ம், 3ம், 4ம் தெரிவுகள் கணக்கில் எடுக்கப்படும். இந்த கணிப்பு முறையும் தேர்தல் முடிவுகள் உறுதியாவதை இழுத்தடிக்கும்.
