நடைமுறைக்கு சாத்தியமற்ற புதிய Green Card விண்ணப்ப விதிகள்

நடைமுறைக்கு சாத்தியமற்ற புதிய Green Card விண்ணப்ப விதிகள்

சனாதிபதி ரம்பின் அமெரிக்க அரசு அமெரிக்க Green Card விண்ணப்பத்திற்கான விதிகளை வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு சாத்தியம் அற்ற முறையில் மாற்றி அமைத்துள்ளது. 

புதிய விதிப்படி Green Card க்கு விண்ணப்பம் செய்பவர் அமெரிக்காவை விட்டு வெளியேறி, தமது நாடு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இம்முறை நடைமுறைக்கு சாத்தியம் அற்றது, நெருக்கடி நிறைந்தது.

உதாரணமாக H-1B வெளிவாய்ப்பு விசா பெற்ற இந்தியர் ஒருவர் அமெரிக்கா சென்று பல ஆண்டுகள் தொழில் செய்து, உழைத்த பணத்தில் வீடு, கார் கொள்வனவு செய்து, பிள்ளைகளை பாடசாலைகளில் இணைத்து வாழ்கையில் அவற்றை எல்லாம் கைவிட்டு இந்திய செல்வது நடைமுறைக்கு சிரமம்.

அமெரிக்காவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை கொண்ட பிள்ளைகள் என்றாலும் அவர்களை தனியே அமெரிக்காவில் விட்டுவிட முடியாது. கைக்கொண்ட தொழிலையும் கைவிடுவதும் நன்றன்று. 

ஒரு நிரந்தர அமெரிக்க முகவரி இன்றி வீடு, கார், வங்கி கணக்குகளை கொண்டிருப்பதுவும் கடினம்.

Green Card விண்ணப்பம் முற்று பெற பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் தேவைப்படலாம்.