நவம்பர் 8 முதல் 33 நாட்டவர் அமெரிக்கா செல்லலாம்

நவம்பர் 8 முதல் 33 நாட்டவர் அமெரிக்கா செல்லலாம்

நவம்பர் மாதம் 8ம் திகதி முதல் முழுமையாக COVID தடுப்பூசி பெற்ற 33 நாட்டவர் அமெரிக்காவுக்கு செல்லலாம் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஐரோப்பிய நாடுகள் 26 (Schengen நாடுகள்), பிரித்தானியா, பிரேசில், சீனா, இந்தியா, ஈரான், அயர்லாந்து, தென் ஆபிரிக்கா ஆகியனவே மேற்படி 33 நாடுகள்.

முழுமையாக COVID தடுப்பூசி பெற்று இருப்பதுடன், இவர்கள் பயணம் ஆரம்பிக்க 72 மணித்தியாலத்துள் COVID தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த negative test ஆவணம் கொண்டிருப்பதும் அவசியம்.

பயணிப்போர் அமெரிக்காவின் Food and Drug Administration (FDA) அனுமதித்த அல்லது World Health Organization (WHO) emergency use ஆக அனுமதித்த தடுப்பு ஊசிகளை பெற்று இருக்கலாம். அதனால் சீனா தயாரித்த Sinovac, Sinopharm, இந்தியா தயாரித்த பிரித்தானியாவின் AstraZeneca தடுப்பு மருந்துகளும் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் ரஷ்யாவின் Sputnik V மருந்து ஏற்றுக்கொள்ளப்படாது. இதை WHO இதுவரை அனுமதிக்கவில்லை.

மேற்படி நிபந்தனைகளுக்கு அமைய அமெரிக்கா செல்வோர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படார்.

இந்த வழிமுறைப்படி கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாட்டவரும் தரை மூல பயணங்களை மேற்கொள்ளலாம்.