நாளொன்றுக்கு எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும்?

நாள் ஒன்றுக்கு ஒருவர் எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு.

ஒரு பதில் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 குவளை தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிறது. இது உண்மையா? இதற்கான ஆதாரங்களை தேடியபோது விஞ்ஞான முறையிலான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீர் விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு செய்தி பரப்பினார்களோ?

எமக்கு தேவையான நீர் நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் இருந்து கிடைக்கின்றது. தேநீர், பழங்கள், பழ சாறுகள் போன்றவற்றில் இருந்தும் நாமது உடல் நீரை பெறுகின்றது. இதை எல்லாம் எவ்வாறு கணக்கிட்டு கொள்வது?

நீரின் அளவு குறைவது மட்டுமல்ல தேவைக்கும் அதிகமாவதும் நல்லதல்ல. அப்படியாயின் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்?

ஒருவரின் சலம் நிறம் கொண்டதாக இருப்பின் அவர் மேலும் நீர் அருந்துவது அவசியம். சலம் நிறமற்று இருப்பின் அவர் உட்கொள்ளும் நீரின் அளவு போதியதாகும். சுலபமாக சொல்வதாயின், one must drink water until his or her urine becomes color-less.