நியூ யோர்க் நகரின் அடுத்த மாநகர முதல்வர் ஒரு இஸ்லாமியர்?

நியூ யோர்க் நகரின் அடுத்த மாநகர முதல்வர் ஒரு இஸ்லாமியர்?

அமெரிக்காவின் மிகப்பெரிய நகர்களில் ஒன்றான நியூ யார்க் (New York) நகரின் அடுத்த முதல்வராக (Mayor) Zohran Mamdani என்ற இஸ்லாமியர் ஒருவர் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Democratic கட்சி சார்பில் முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள நபரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் 33 வயதான Mamdani 43% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.இவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் New York மாநில ஆளுநர் Andrew Cuomo 36% வாக்குகளை மட்டும் பெற்று இரண்டாம் உள்ளார்.

தெற்காசிய இஸ்லாமிய வம்சம் வழி வந்த Mamdani  உகண்டா நாட்டின் Kampala நகரில் பிறந்தவர். இவர் 7 வயதை அடைந்த காலத்தில் இவரின் குடும்பம் அமெரிக்கா சென்றது.

இவர் தான் முதல்வர் ஆகினால் நியூ யார்க் நகரில் இலவச பஸ் சேவையை வழங்க அறிவித்துள்ளார்.

Cuomo ஒரு இஸ்ரேல் ஆதரவாளர், Mamdani ஒரு பலஸ்தீனர் ஆதரவாளர்.