நீச்சல் உலகை கலக்கும் 12 வயது Yu Zidi 

நீச்சல் உலகை கலக்கும் 12 வயது Yu Zidi 

நீச்சல் உலகை கலக்கி வருகிறார் சீன நீச்சல் வீராங்கனையான 12 வயது Yu Zidi. வியாழக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற 2025 World Aquatic Championship போட்டியில் Yu Zidi யின் 4×200 மீட்டர் freestyle relay அணி பித்தளை பதக்கத்தை வென்றுள்ளது.

Yu Zidi இறுதி போட்டியில் நீந்தவில்லை என்றாலும் இவரின் அணி இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த போட்டியில் நீந்தியவர் என்பதால் இவருக்கும் பதக்கம் உண்டு.

இந்த பதக்கம் மூலம் இவர் அதி குறைந்த வயதில் மேற்படி போட்டியில் பதக்கம் பெற்றவர் ஆகிறார்.

World Aquatic Championship போட்டியில் போட்டியிட குறைந்தது 14 வயதை அடைந்திருக்க வேண்டும். ஆனாலும் Yu Zizi யின் சாதனைகள் காரணமாக இவரின் 12ம் வயதிலேயே போட்டியிட அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதே தினம் இவர் 200 மீட்டர் butterfly நீச்சல் போட்டியில் 0.31 செக்கன் பிந்தியதால் 4ம் இடத்தை அடைந்துள்ளார்.

திங்கள் இடம்பெற்ற 200 மீட்டர் medley போட்டியில் இவர் 0.06  பிந்தியதால் 4ம் இடத்தை அடைந்திருந்தார்.

வரும் ஞாயிறு இவர் 400 மீட்டர் medley போட்டியில் போட்டியிடுவார்.