2018ம் ஆண்டு இந்தியாவின் Flipkart என்ற இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை அமெரிக்காவின் Walmart என்ற நிறுவனம் கொள்வனவு செய்திருந்தது.
அப்போது Tiger Globe என்ற முதலீட்டு நிறுவனம் Flipkart நிறுவனத்தில் 17% பங்குகளை கொண்டிருந்தது. அதன் பெறுமதி $1.6 பில்லியன். இந்த முதலீட்டை Tiger Globe நிறுவனம் Mauritius என்ற இந்து சமுத்திர நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்று மூலமே முதலிட்டது.
India-Mauritius Tax Treaty விதிப்படி இந்தியாவில் முதலிடப்படும் Mauritius முதலீடுகளுக்கு இந்தியாவில் வரி அறவிடப்படாது என்று Tiger Globe நம்பி இருந்தது.
ஆனால் Tiger Globe உண்மையில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்றும் அது Mauritius நாட்டில் ஒரு tax residency certificate ஐ மட்டும் கொண்டுள்ளது என்றும், வரி விலக்குக்கு அது போதியதல்ல என்றும் இந்திய நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்த உண்மைகள் சில Panama Papers மற்றும் Paradise Papers களில் பகிரங்கமாகி இருந்தன.
2000ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை சுமார் $180 பில்லியன் முதலீடுகள் Mauritius ஊடாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு இருந்தன. அவர்கள் அனைவரும் தற்போது மிரண்டு உள்ளனர்.
