நெருக்கடியில் உள்ள ரம்ப் இஸ்ரேல் பிரதமர் மீது பாய்ச்சல்

நெருக்கடியில் உள்ள ரம்ப் இஸ்ரேல் பிரதமர் மீது பாய்ச்சல்

ஈரான் மூடியுள்ள ஹோர்முஸ் கப்பல் பாதையை மீண்டும் தமது கப்பல்களின் போக்குவரத்துக்கு திறக்க முடியாத நெருக்கடியில் உள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு மீது திங்கள் பாய்ந்துள்ளார். தொலைபேசி உரையாடல் ஒன்றின் போதே ரம்ப் தனது எதிர்ப்பை இஸ்ரேல் பிரதமருக்கு காட்டியுள்ளார்.

இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை அமெரிக்காவுடனான யுத்த நிறுத்த பேச்சுக்களை ஈரான் இடைநிறுத்துவதாக அறிவித்ததால் விசனம் கொண்டதாலேயே ரம்ப் இஸ்ரேல் பிரதமர் மீது பாய்ந்துள்ளார்.

குறிப்பாக இஸ்ரேல் லெபனானின் தலைநகர் மீது செய்யவிருந்த தாக்குதலை ரம்பின் அழுத்தம் காரணமாக இஸ்ரேல் பிரதமர் கைவிட்டு உள்ளார்.

உடனே இஸ்ரேல் அரசில் அங்கம் கொண்ட மிதவாத யூத கட்சிகள் இஸ்ரேல் பிரதமர் மீது வசை பாட ஆரம்பித்துள்ளனர்.

அதேநேரம் அக்டோபர் மாதம் இஸ்ரேலில் இடம்பெறவுள்ள தேர்தலில் நெட்டன்யாஹு தோல்வி அடைவதற்கான சந்தர்ப்பம் அதிகரித்து வருகிறது.