நேபாளத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம் அடைந்து இன்று பாராளுமன்றம் ஆர்ப்பாட்டம் செய்வோரால் தீயிடப்பட்டு உள்ளது. அதற்கு முன் பிரதமர் KP Sharma Oli பதவி விலகியுள்ளார். ஆர்பாட்டங்களுக்கு இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.
பல அரசியல் தலைவர்களின் வதிவிடங்களும் தீயிடப்பட்டு அல்லது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
முதலில் நேபாளில் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக இளையோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை கட்டுப்படுத்த அரசு social media களை தடை செய்தது. அதன் பின்னரே வன்முறைகள் அதிகரித்தன. அங்கு 48.1% மக்கள் social media களை பயன்படுத்துகின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தலைநகரின் Tribhuvan விமானநிலையம் மூடப்பட்டு உள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற அறகலய கிளர்ச்சிபோல் நேபாள் கிளர்ச்சிகளும் குறிப்பிடக்கூடிய தனி தலைமை இல்லை.
பதவி விலகிய பிரதமர் கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதவியை பெற்று இருந்தார். 2008ம் ஆண்டு முதல் இங்கு 14 பிரதமர்கள் பதவிக்கு வந்துள்ளனர்.