நேபாளத்தில் இடம்பெற்ற மண் சரிவுடன் கூடிய வெள்ள பெருக்குக்கு பலியானோர் தொகை 390 ஆக உயர்ந்ததுடன் இருப்பிடம் அறியாதோர் தொகையும் 1,400 ஆக அதிகரித்து உள்ளது.
மேற்படி வெள்ள பெருக்கால் நீர் மட்டம் அதிகரித்து உள்ள இரண்டு வாவிகள் உடையும் ஆபத்தில் இருப்பதால் மேலும் அழிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று சீனாவும், நேபாளமும் அறிவித்துள்ளன.
சீனா தனது பக்கத்து வாவி ஒன்றுள் அடுத்த மூன்று தினங்களில் 3 மில்லியன் சதுர மீட்டர் நீர் புகும் என்றும் அந்த வாவி உடையும் சந்தர்ப்பம் உண்டு என்றும் கூறியுள்ளது.
இந்த அழிவின் ஆரம்பம் திடமாக அறியப்படாவிட்டாலும் பெருமளவு பாறைகள் அல்லது மண் சரிவு உயரிய மலைகளுக்கு இடையே நிரம்பி இருக்கும் இறுகிய பனியான கிளேசியர் (glacier) மீது விழ, கிளேசியர் உடைந்து பெருக்கை ஆரம்பித்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
