பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் F-7 வகை யுத்த விமானம் ஒன்று கல்லூரி ஒன்றில் விழுந்ததால் குறைந்தது 19 பேர் பலியாகியும், மேலும் 164 வரை காயமடைந்தும் உள்ளனர்.
Milestone School and College என்ற கல்லூரியின் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றின் மீதே இந்த விமானம் விழுந்துள்ளது. அதன் விமானியும் பலியாகி உள்ளார் என்கிறது விமானப்படை.
திங்கள் பிற்பகல் 1:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பங்களாதேஷ் செவ்வாய் கிழமையை துக்க தினமாக அறிவித்துள்ளது.
இந்த கல்லூரியில் 4 வயது முதல் 18 வயது வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.