அமெரிக்க சனாதிபதி ரம்பின் அரசு அமெரிக்கா சென்று உயர்கல்வில் படிப்போர் தமது படிப்பின் பின் அங்கே தொழில் செய்ய முனைந்தால் புதிதாக $70,000 கட்டணம் ஒன்றை நடைமுறை செய்ய திட்டமிடுகிறது.
பெரும் பணம் செலவழித்து அமெரிக்காவில் உயர் கல்வி கற்க செல்லும் மாணவர் தமது கல்விக்கு மெருகூட்ட கற்ற துறையிலேயே அமெரிக்க வேலை அனுபவத்தையும் (OPT: Optional Practical Training) பெற விரும்புவதுண்டு. இந்த சந்தர்பத்துக்கே ரம்ப் அரசு மாணவரின் கல்வி நிலையங்களிடம் இருந்து $70,000 அறவிட முனைகிறது.
கல்வி நிலையங்கள் மேற்படி செலவை மாணவரிடம் அறவிடலாம்.
இரண்டாம் OPT நீடிப்புக்கும் அதற்கு பின்னரும் மேலும் $30,000 அறவிடவும் மேற்படி திட்டம் முனைகிறது.
2024 – 2025 கல்வி ஆண்டில் 62,000 சீன மாணவர் தமது மாணவ விசா கல்வியின் பின் OPT திட்டத்தில் இணைந்து அமெரிக்க தொழில் அனுபவம் பெற்றுள்ளனர்.
பொதுவாக OPT 12 மாதங்களுக்கு வழங்கப்படும். ஆனால் Science, Technology, Engineering, Mathematics (STEM) துறையினருக்கு 24 மாதங்கள் வரை அனுமதி வழங்கப்படும்.
இந்த கட்டணம் நடைமுறைக்கு வந்தால் இலகுவில் அமெரிக்க தொழில் அனுபவம் தராத அமெரிக்க கல்விக்கு போட்டி குறையலாம்.
