பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று மீண்டும் NEET சோதனை

பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று மீண்டும் NEET சோதனை

பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று மீண்டும் இந்தியாவின் National Eligibility Entrance Test – Undergraduate (NEET-UG) சோதனை இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் மே 3ம் திகதி நடைபெற்ற சோதனை வினாக்கள் சோதனைக்கு முன் கசிந்து இருந்ததாலேயே சோதனை இரண்டாம் தடவை நடைபெறுகிறது.

இம்முறை நாடு முழுவதும் 5,440 சோதனை நிலையங்களில் பல மில்லியன் மாணவர் பங்கெடுத்து உள்ளனர். மே 3ம் திகதி சோதனையில் 2.28 மில்லியன் மாணவர் பங்கெடுத்து இருந்தனர்.

இம்முறை சோதனை நிலையங்களில் 1.3 மில்லியன் வீடியோ கருவிகள் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டன. அத்துடன் 51,311 தொலைபேசி jammers மூலம் தொலைபேசிகள் முடக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சோதனை நிலையத்தையும் 40 முதல் 50 பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாத்து உள்ளனர்.

இந்த சோதனையின் புள்ளிகளின் அடிப்படையிலேயே அரச மருத்துவ பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும்.