ஐ.நா. அமர்வையொட்டி பிரித்தானியா, கனடா, அஸ்ரேலியா ஆகிய 3 நாடுகளும் இன்று ஞாயிறு பலஸ்தீன நாட்டை (Palestinian state) ஏற்றுக்கொண்டுள்ளன.
பிரான்ஸ் பலஸ்தீனத்தை ஏற்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்து உள்ளது. பெல்ஜியம், போர்த்துக்கல், Malta ஆகிய நாடுகளும் பலஸ்தீனத்தை ஏற்க உள்ளதாக கூறியுள்ளன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்த்தபடி மேற்படி மேற்கு நாடுகள் பலஸ்தீனத்தை ஏற்பதை வன்மையாக கண்டித்து உள்ளன.
சுமார் 80 நாடுகள் 1988ம் ஆண்டு ஏற்றுக்கொண்ட பலஸ்தீனத்தையே நியாயத்தின் காவலர் என்று தம்மை பறைசாற்றும் மேற்படி மேற்கு நாடுகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன.
1988ம் ஆண்டு பலஸ்தீனத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் இலங்கை, இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியனவும் அடங்கும்.