பலஸ்தீனர் ஆதரவுடன் இஸ்ரேலில் ஆட்சிக்கு வரும் எதிர்கட்சி

பலஸ்தீனர் ஆதரவுடன் இஸ்ரேலில் ஆட்சிக்கு வரும் எதிர்கட்சி

ஒரு நாட்டின் சிறுபான்மை காட்சிகள் ஆட்சியை அமைக்க முடியாது என்றாலும் சிலவேளைகளில் பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு இன்றியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை தோன்றலாம். பலஸ்தீனரை வதைக்கும் இஸ்ரேலிலும் தற்போது இந்த நிலைமையே தோன்றி உள்ளது.

பிரதமர் நெத்தன்யாஹூ வீழ்ச்சியின் முதல் படியாக எதிர்கட்சிகள் Yashar என்ற எதிர்கட்சி உறுப்பினரை அடுத்த இஸ்ரேல் பாராளுமன்ற பேச்சாளராக தெரிவு செய்துள்ளனர். மொத்தம் 120 உறுப்பினர்களை கொண்ட சபையில் 66 பேர் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். 

அந்த 66 வாக்குகளில் 19 வாக்குகள் இஸ்ரேல் குடியுரிமை கொண்ட பலஸ்தீன உறுப்பினர்களின் வாக்குகள். இவர்கள் Joint List மற்றும் Raam கட்சி உறுப்பினர்,

நெத்தன்யாஹூ கட்சி போட்டியாளர் 53 வாக்குகளை மட்டுமே பெற்றார். பாராளுமன்ற பேச்சாளர் பதவியை இழந்த  நெத்தன்யாஹூ அதிகாரத்தை மெல்ல இழக்கிறார்.

பின்னர் பிரதமர்  நெத்தன்யாஹூவின் பிரதமர் பதவியும் பறிபோகலாம்.

இலங்கையிலும் சிலகாலம் சிங்களம் சுமார் 50:50 ஆக பிரிய, தமிழர் இவ்வாறு ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருந்தனர்.