பலஸ்தீனர் நாட்டை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும்

பலஸ்தீனர் நாட்டை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும்

பிரான்ஸ் பலஸ்தீனர் நாட்டை செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொள்ள உள்ளதாக அந்த நாட்டின் சனாதிபதி மக்ரோன் (Emmanuel Macron) வியாழக்கிழமை கூறியுள்ளார்.

பிரான்ஸ் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளும் பிரான்சுடன் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.

பல சந்ததிகளாக செய்த தவறை பிரான்ஸ் தற்போது, பெரும் அழிவுகளுக்கு பின், திருத்த முன்வந்துள்ளது. 

ஆனாலும் இராணுவ பலத்தை உள்ளடக்காத பிரான்சின் இந்த அரசியல் நகர்வு பலஸ்தீனருக்கு உடனடி நலன் எதையும் வழங்காது. குறிப்பாக அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவு உள்ளவரை இஸ்ரேலை எவரும் எதையும் செய்ய முடியாது.

அதேவேளை Amihai Eliyahu என்ற இஸ்ரேல் Heritage அமைச்சர் காசாவில் பட்டினி இல்லை என்றும், முழு காசாவும் விரைவில் யூதர்கள் நிலமாகும் (all of Gaza will be Jewish) என்றும் கூறியுள்ளார்.