பிரான்ஸ் வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொள்ள அறிவித்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் Keir Starmer தொடர்ந்தும் பலஸ்தீனர் நாட்டை மறைமுகமாக மறுத்து வருகிறார்.
பலஸ்தீனர் நாட்டை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் அது ஒரு சமாதான தீர்வுடன் இணைந்து ஏற்படவேண்டும் என்றும் Starmer கூறியுள்ளார். பல சந்ததிகளாக மேற்கு நாடுகளின் அரசியல் புள்ளிகள் இந்த நரி தந்திர சூத்திரத்தையே பாடி வருகின்றனர்.
ஏனென்றால் இஸ்ரேல் என்றைக்கும் பலஸ்தீனர் நாட்டை ஏற்காது. அதனால் அங்கு தீர்வு ஏற்படாது. அதனால் Starmer போன்றோர் பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொள்ளாது தப்பிக்கலாம்.
இன்றைய இஸ்ரேல் உட்பட பலஸ்தீனர் பகுதிகளை 1948ம் ஆண்டுக்கு முன் அப்போது ஆக்கிரமித்து இருந்த பிரித்தானியா British Mandate Palestine என்றே அழைத்திருந்தது.
வெள்ளிக்கிழமை 9 கட்சிகளை உள்ளடக்கிய 221 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலஸ்தீனர் நாட்டை ஏற்குமாறு Starmer க்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.