பழைய அரசியலில் முடிந்த பங்களாதேச மாணவர் புரட்சி

பழைய அரசியலில் முடிந்த பங்களாதேச மாணவர் புரட்சி

இலங்கையில் இடம்பெற்ற அரகளைய புரட்சி இலங்கையோ, உலகமோ எதிர்பார்க்காத வகையில் JVP வழிவந்த அனுர தலைமையிலான ஒரு புதிய ஆட்சியை இலங்கைக்கு வழங்கி இருந்தது. ஆனால் பங்களாதேசத்தில் இலங்கை புரட்சிக்கு பின் இடம்பெற்ற மாணவர் புரட்சி ஒரு பழைய கட்சியை விரட்டி மற்றைய பழைய கட்சியை இன்று ஆட்சியில் அமர்த்துகிறது.

1949ம் ஆண்டு முதல் ஒரு பிரதான கட்சியாக இருந்த Awami League கட்சியை அண்மையில் புரட்சி மூலம் விரட்டிய பங்களாதேஷ் தற்போது 1978ம் ஆண்டு முதல் மற்றொரு பிரதான கட்சியாக விளங்கும் BNP கட்சியை தேர்தல் மூலம் ஆட்சியில் அமர்த்துகிறது. BNP கட்சியின் Tarique Rahman அடுத்த பிரதமர் ஆகவுள்ளார்.

அந்த நாட்டின் சனாதிபதியாக இருந்த இவரின் தந்தை 1981ம் ஆண்டு இராணுவ புரட்சி ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் இவரின் தாயார் பிரதமரானார். 

2007ம் ஆண்டு இராணுவத்தின் ஆதரவுடன் இருந்த ஆட்சி இவரை தாயின் ஆட்சி காலத்தில் செய்ததாக கூறப்படும் ஊழல், படுகொலை குற்றங்களுக்காக 18 மாதங்கள் சிறையில் அடைத்தது.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர் உடனே லண்டன் சென்று வாழ்ந்தார். லண்டனில் 17 ஆண்டுகள் வாழ்ந்த இவர் கடந்த டிசம்பர் மாதமே பங்களாதேஷ் திரும்பி இருந்தார்.

தாயார் டிசம்பர் மாதம் மரணித்தால் இவர் BNP கட்சி சார்பில் போட்டியிட்டு ஆட்சி அமைக்க போதிய ஆசனங்களை வென்றதால் பிரதமர் ஆகிறார்.