பாகிஸ்தான் பேச்சில் அமெரிக்கா, ஈரான், தீர்வுக்கு சந்தர்ப்பம் குறைவு 

பாகிஸ்தான் பேச்சில் அமெரிக்கா, ஈரான், தீர்வுக்கு சந்தர்ப்பம் குறைவு 

இன்று சனிக்கிழமை அமெரிக்காவும், ஈரானும் பாகிஸ்தானில் கூடி சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க உள்ளன. அனால் இந்த பேச்சுக்கள் முழுமையான பயன்களை அளிப்பதற்கான சந்தர்பங்கள் மிக குறைவாகவே உள்ளன.

அமெரிக்க சனாதிபதி ரம்பின் பிரதான நோக்கம் பாகிஸ்தான் பேச்சுக்கள் மூலம் ஹோர்முஸ் கப்பல் பாதையை முற்றாக திறக்க வைப்பதே. இந்த பணியை அமெரிக்க ஆயுதம் செய்ய முடியாது உள்ளது. மற்றபடி அமெரிக்கா ஈரானை தொடர்ந்தும் இஸ்ரேலின் விருப்பத்துக்கு ஏற்ப அடக்கி ஆளவே விரும்புகிறது.

உலகம் சவுதி, UAE, கட்டார், பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகளிடம் பெரும் பணத்துக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய, இந்த நாடுகள் தாம் எரிபொருள் மூலம் பெறும் வருமானத்தை அமெரிக்காவில் முதலீடு செய்கின்றன. இது அமெரிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அவசியமாகிறது. ஈரானின் ஹோர்முஸ் முடக்கம் இந்த சக்கரத்தை முறித்துள்ளது.

அதேநேரம் ஹோர்முஸ் முடக்கம் ஈரானுக்கு மலிவு விலையில் கிடைத்த மிகப்பெரிய ஆயுதமாகி உள்ளது. ஈரான் இந்த பலத்தை இலகுவில் கைவிடாது.