பிரித்தானியாவில் புதிய இரட்டை குடியுரிமை கடவுச்சீட்டு விதிகள்

பிரித்தானியாவில் புதிய இரட்டை குடியுரிமை கடவுச்சீட்டு விதிகள்

பெப்ரவரி மாதம் 25ம் திகதி முதல் பிரித்தானியாவின் குடியுரிமையையும் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையையும் கொண்டவர்களுக்கு (dual-citizen) புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

இவர்களின் இரண்டாம் குடியுரிமை இலங்கை போன்ற பிரித்தானியாவுக்கான விசா தேவையான நாடுகளின் குடியுரிமையாக இருப்பின் இவர்கள் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது பிரித்தானியாவின் certification of entitlement என்ற புதிய ஆவணத்தை கொண்டிருந்தால் மட்டுமே இவர்கள் பிரித்தானியா திரும்ப முடியும்.

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு ஒன்றுக்கான கட்டணம் 100 பவுண்ட்ஸ் ஆக இருக்கையில், புதிய certification of entitlement ஒன்றுக்கான 589 பவுண்ட்ஸ் ஆக உள்ளது.

கனடா போன்ற விசா தேவையற்ற நாடுகளை இரண்டாம் குடியுரிமை நாடாக கொண்டவர்கள் 16 பவுண்ட்ஸ் கட்டணம் செலுத்தி ETA (Electronic Travel Authorization) பெற்று இருத்தல் அவசியம். இரட்டை குடியுரிமை கொண்டோர் ETA க்கு விண்ணப்பிக்க முடியாது.

2021ம் ஆண்ட பிரித்தானியாவில் பிறந்தவர்களில் 1.2% மக்கள் (587,600 பேர்) இரட்டை குடியுரிமை கொண்டிருந்தனர். ஆனால் வெளிநாடுகளில் பிறந்து பின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரில் 6.5% மக்கள் (648,700 பேர்) இரட்டை குடியுரிமை பெற்று இருந்தனர்.

இரட்டை குடியுரிமை கொண்ட உங்களிடம் வீடு, கார் போன்ற சொத்துக்கள், வங்கியில் பணம், வேலைவாய்ப்பு ஆகியன பிரித்தானியாவில் இருந்தாலும் மேற்படி ஆவணம் இல்லை என்றால் நீங்கள் வெளிநாடுகளில் முடக்கப்படுவீர்கள்.