பிரித்தானிய குடிவரவு 50% ஆல் வீழ்ச்சி 

பிரித்தானிய குடிவரவு 50% ஆல் வீழ்ச்சி 

பிரித்தானியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து செல்லும் குடிவரவாளர் தொகை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு சுமார் 50% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பிரித்தானியாவின் Office for National Statistics (ONS) தனது அறிக்கையில் 2025ம் ஆண்டு பிரித்தானிய சென்ற மொத்த குடிவரவாளர் தொகை 171,000 என்று கூறியுள்ளது. 2024ம் ஆண்டு இத்தொகை 331,000 ஆக இருந்துள்ளது.

2023ம் ஆண்டு பிரித்தானியா மிகக்கூடிய குடிவரவாளரை கொண்டிருந்தது. அந்த ஆண்டு 944,000 பேர் பிரித்தானியாவில் குடியேறி இருந்தனர்.

குடிவரவு வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் 2024ம் ஆண்டு Conservative கட்சி மாணவ விசாவில் உள்ளோர் குடும்பத்தினரை அழைப்பதை தடுத்தமை, வெளிநாடுகளில் இருந்து வரும் பயிற்றப்பட்ட ஊழியருக்கான ஊதியத்தை 41,700 பௌண்ட்ஸ் ஆக அதிகரித்தமை ஆகியன பிரதான காரணங்கள் ஆகின்றன.