அமெரிக்க விமான படையின் நீண்ட தூரம் சென்று தாக்கும் B-1 குண்டு வீச்சு விமானம் நிலை கொண்டுள்ள பிரித்தானிய RAF Fairford விமான நிலையம் அருகே ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவைகள் பயணித்த 3 வான்களில் ஒரு தொகை பெட்ரோல் மட்டுமே இருந்ததாகவும், வெடி பொருள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய போலீசார் கூறியுள்ளனர்.
இந்த ஐந்து நபர்களின் வீடுகளும் பிரித்தானிய போலீசாரால் தேடுதல் செய்யப்பட்டன.
பிரித்தானிய குடியுரிமை கொண்ட இந்த 5 பேரும் 23 முதல் 25 வயது வரையானவர் என்றும், அதில் 4 பேர் Westminster பகுதியிலும், ஒருவர் Camden பகுதியிலும் வாழ்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஐவரும் கைதானவுடன் அமெரிக்க சனாதிபதி ரம்ப் முண்டியடித்துக்கொண்டு தாம் இவர்களை நீண்ட காலமாக கண்காணித்து வந்ததாக கூறியிருந்தார். ஆனால் பிரித்தானிய இவர்கள் மீதான முன்கூட்டிய கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டதால் தான் ஏமாற்றம் (disappointed) அடைந்துள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
இந்த விமான தளத்தில் இருந்து சென்ற அமெரிக்க B-1 விமானங்கள் ஈரான் மீது குண்டுகளை வீசி இருந்தன.
