பிரித்தானிய பிரதமர் Keir Starmer தான் பிரதமர் பதவியில் இருந்தும், Labour கட்சி பதவியில் இருந்தும் விலகுவதாக இன்று திங்கள் கூறியுள்ளார். இந்த தீர்மானத்தை தான் ஏற்கனவே பிரித்தானிய அரசருக்கும் தெரிவித்து உள்ளதாக கூறியுள்ளார்.
Labour கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளே Starmer பதவி விலக காரணம்.
கடந்த கிழமை இடைத்தேர்தல் ஒன்றின் மூலம் பாராளுமன்றம் வரும் Andy Burnham என்பவர் Labour கட்சி தலைமை மற்றும் பிரதமர் பதவிகளை அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Burnham 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை Leigh தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் 9 ஆண்டுகள் Manchester மாநகர முதல்வராகவும் பதவிகள் வகித்தவர்.
உலகை சர்வாதிகாரம் மூலம் ஆண்ட பிரித்தானியா தற்போது தன்னை சனநாயகம் மூலம் ஆட்சி செய்ய ஒரு பிரதமரை கொண்டிருக்க முடியாது முழிக்கிறது.
Keir Starmer ஆட்சி: 11 மாதங்கள் (ஜூலை 2024 முதல்)
Rishi Sunak ஆட்சி: 1 ஆண்டு, 8 மாதங்கள் (அக்டோபர் 2022 முதல்)
Liz Truss ஆட்சி: 44 தினங்கள் (செப்டம்பர் 2022 முதல்)
Boris Johnson ஆட்சி: சுமார் 3 ஆண்டுகள்
Theresa May ஆட்சி: சுமார் 3 ஆண்டுகள்
