பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் பிரதமர் Francois Bayrou மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் திங்கள் நிறைவேறியதால் பிரதமர் பதவியை இழக்க அரசு கவிழ்ந்துள்ளது. பிரதமருக்கு எதிராக 364 வாக்குகளும், ஆதரவாக 194 வாக்குகளும் கிடைத்துள்ளன.
2026ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் பிரெஞ்ச் அரசு $51 பில்லியன் பெறுமதியான செலவுகளை கட்டுப்படுத்த முனைந்த வேளையிலேயே அரசு கவிழ்ந்துள்ளது. இதனால் சனாதிபதி மக்கிறோன் (Macron) மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இந்த பிரதமர் 9 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் முன்னைய பிரதமர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். பிரான்ஸ் ஒரு திடமான அரசை அமைக்க முடியாது உள்ளது. இந்த நாடு இடது, நடுநிலை, வலது துண்டுகளாக ஆழ முடியாது பிரிந்து உள்ளது.
சனாதிபதி விரைவில் புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பார். ஆனால் அந்த பிரதமரின் ஆட்சியும் விரைவில் கவிழலாம்.
அடுத்த பிரதமர் கடந்த 2 ஆண்டுகளில் பதவிக்கு வரும் 5 ஆவது பிரதமராக இருப்பார்.
பிரான்சுக்கு அதிக கடன் உள்ளது. 2020ம் ஆண்டு இந்த கடன்களுக்கான வட்டி செலவு மட்டும் 30 பில்லியன் யூரோ ஆக இருந்தது. அரச செலவுகளை குறைக்காவிடின் 2030ம் ஆண்டில் வட்டி செலவு ஆண்டுக்கு 100 பில்லியன் யூரோ ஆக அதிகரிக்கும்.
 
									